இரு இதயம் துடிக்கும் அந்தத்
தருணம் வேண்டும்,
நம் விழிகள் பக்கத்தில் உரசிட வேண்டும்,
தொலைவு இல்லா நெருக்கம் வேண்டும்,
அதில் நாம் ஒருவராகக் கலந்திருக்க வேண்டும்.
எப்போதும் உன் மீதுள்ள அன்பு மறவாதிருக்க வேண்டும்,
அன்பே உன் கரங்களில் நான் வாழ வேண்டும்,
நான் எனும் என்னை மறந்து இருக்க வேண்டும்,
அன்பே நீ மட்டும் என் விழியில் வாழ்ந்திட வேண்டும்.
உடல் இரண்டும் கரையும் இத்தருணத்திலே,
மொழி மறையும் அந்தி மயக்கத்திலே,
என்னை மறந்து உன்னை பார்க்கும் பொழுதினிலே,
சொர்கத்தின் தலைவாசல் திருக்கையிலே.
மனம் என்னும் ஆயுதம் மறையும்,
காதல் என்ற போகம் அடங்கும்,
உணர்வற்ற இத்தருணத்தை,
என்னவென்று சொல்வேன் என் காதலியே.
No comments:
Post a Comment
Comments or feed backs please